;
Athirady Tamil News

மாணவியின் உயிரை பறித்த நீட் தேர்வு… சித்தப்பாவிற்கு அனுப்பிய கடைசி மெசேஜ்

0

கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் நீட் தேர்வினால் ஏற்பட்ட மன அழுத்தத்தினால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நீட் தேர்வு
இந்தியாவில் மருத்துவம் படிப்பதற்கு முக்கிய தேர்வதாக பார்க்கப்படுவது தான் நீட். இந்தியாவில் உள்ள மாநிலங்களில் உள்ள மாணவ மாணவிகள் நீட் தேர்வு எழுதி வெற்றி பெற்று மருத்துவ படிப்பு படிக்க சென்றுள்ளனர்.

அந்த வகையில் தமிழகத்தில் நீட் தேர்வு குறித்த அச்சம் மாணவ மாணவிகளிடையே அதிகமாக இருந்து வருகின்றது. கோவை மாவட்டத்தைச் சேர்ந்த அனுகீர்த்தனா என்ற 19 வயது பெண் உயிரை மாய்த்துக் கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மரணமடைந்த அனுகீர்த்தனா
அனுகீர்த்தனா நீட் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக நடித்து நீட் தேர்வு எழுதியுள்ளார். மருத்துவராக ஆக வேண்டும் என்ற கனவில் இருந்தவருக்கு, நீட் தேர்வு முறைகேடு காரணமாக மறுதேர்வு நடத்தப்படும் என்று அறிக்கப்பட்டது பெரும் வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்த அறிவிப்பு குறித்த மாணவியை மனசோர்விற்குள் தள்ளியுள்ளது. மீண்டும் தேர்வு எழுதினால் தான் வெற்றி பெறுவோமா? என்ற பயத்தில் இருந்த அவர், இன்று அதிகாலை தனது சித்தப்பாவிற்கு வாட்ஸ் அப் மெசேஜ் அனுப்பிவிட்டு, உடல்வலிக்கு பயன்படுத்தப்படும் மருந்தை குடித்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

உடனே உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், சிகிச்சை பலனின்றி அனுகீர்த்தனா உயிரிழந்துள்ளார்.

அனிதா முதல் அனுகீர்த்தனா வரை உயிரை பறித்த நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.