;
Athirady Tamil News

வேலைக்கு சென்று திரும்பிய யாழ் இளைஞனுக்கு கிளிநொச்சியில் நடந்த துயரம்

0

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உமையாள்புரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் பலியானார்.

குறித்த இளைஞர் தொழிலுக்கு சென்று மீண்டும் வீடு திரும்பிய போது, அவர் பயணித்த மோட்டார் சைக்கில் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த மரம் ஒன்றின் மீது மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை
சம்பவத்தில் யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய இளைஞரே உயிரிழந்தார்.

உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.