;
Athirady Tamil News

சமூகவலைத்தளத்தில் பிரபலமான பெண்ணுக்கு நேர்ந்த துயரம்; கணவன் அரங்கேற்றிய சம்பவம்

0

சென்னையில் குடும்ப சண்டை காரணமாக இன்ஸ்டாகிராம் பிரபலமான இளம் பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நங்கநல்லூரை சேர்ந்த நாகலட்சுமி என்பவர் கடந்த சில வருடங்களாகவே இன்ஸ்டாகிராமில் புடவைகளை எளிதாக கட்டும் வகையில் ரெடிமேடாக மாற்றி தரும் தொழில் செய்து வந்தார். அது தொடர்பான வீடியோக்களை தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டு வந்தார்.

கணவனும் தற்கொலை
இந்நிலையில்தான் குடும்ப சண்டை காரணமாக நாகலட்சுமியை அவரின் கணவர் அரிவாளால் வெட்டிக் கொலை செய்து விட்டு அவரின் கணவர் சுப்பிரமணியனும் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த ஆதம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரது உடலையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் சமூகவலைத்தள பிரபலமான பெண் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.