;
Athirady Tamil News

இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய்!

0
இந்திரவிழாவில் மோட்டார் சைக்கிள் பாதுகாப்புக்கு 200 ரூபாய் அறவிடப்பட்டமைக்கு பலரும் விசனம் தெரிவித்துள்ளனர். 
இது குறித்து வல்வெட்டித்துறை நகர சபையினரும் கவனம் செலுத்தாதமை மோசடிக்காரர்களுக்கு துணை போயுள்ளனரா ? எனும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை முத்துமாரி அம்மன் ஆலய வருடாந்திர தீர்த்த திருவிழாவை முன்னிட்டு “இந்திரா விழா” மிக சிறப்பாக நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை மிக சிறப்பாக இடம்பெற்றது.
அதன் போது வாகன தரிப்பிட கட்டணம் என 200 ரூபாய் தனியார் ஒருவரால் வசூலிக்கப்பட்டு, அதற்கான சிட்டையையும் வழங்கியுள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் ஆளுகைக்கு உட்பட்ட குறித்த பகுதியில் தனியார் ஒருவர் மோட்டார் சைக்கிள் தரிப்பிடத்திற்கு 200 ரூபாய் வசூலித்தமை தொடர்பில் நகர சபையினர் பாராமுகமாக இருந்தமை , மோசடிக்காரர்களுக்கு துணை போகும் செயல் என பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
குறித்த நபர் மீது நகர சபையினர் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , கோரிக்கை விடுத்துள்ளனர் .
You might also like

Leave A Reply

Your email address will not be published.