;
Athirady Tamil News

மக்கள் வங்கிக்கு 656 மில்லியன் ரூபாய் இழப்பு : வெளியான அறிவிப்பு

0

மக்கள் வங்கியின் குறிப்பிட்டதொரு பணப்பரிமாற்றக் கட்டமைப்பில் நாணயமொன்றிற்குப் பிரயோகிக்கப்பட்ட நாணய மாற்று வீதத்தில் ஏற்பட்ட தவறு மற்றும் அதன் மூலம் வாடிக்கையாளர்கள் சிலர் மேலதிக பணத்தைப் பெற்றுக்கொண்டமை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் குறித்த விடயம் தொடர்பில் மக்கள் வங்கி அதிகாரபூர்வ விளக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், இந்தத் தவறுதலான பணப்பரிமாற்றங்கள் கடந்த 2023 மே மாதம் முதல் 2026 மார்ச் மாதம் வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளன.

இலங்கை மத்திய வங்கி
குறிப்பிட்ட சில வாடிக்கையாளர்கள் குறித்த தொகைக்கு மேற்பட்ட பணத்தைப் பெற்றுக்கொண்டுள்ளமை அண்மையில் கண்டறியப்பட்டு, அதன் பின்னர் அது முழுமையாகச் சரிசெய்யப்பட்டு விட்டது.

இந்தத் தவறு கண்டறியப்பட்ட உடனேயே வங்கி முழுமையான உள்ளக மீளாய்வு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதுடன், உரிய செயற்பாட்டுக் கட்டுப்பாடுகளை வலுப்படுத்தியுள்ளது.

இலங்கை மத்திய வங்கி உட்பட உரிய ஒழுங்குமுறை மற்றும் மேற்பார்வை அதிகாரத் தரப்புக்களின் ஆலோசனையின் கீழ் இவ்விடயத்தை வங்கி தற்போது மீளாய்வு செய்து வருகின்றது.

இவ்விடயத்தால் ஏற்பட்டுள்ள நிதி ரீதியான இழப்பு சுமார் 656 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இத்தொகையை வங்கி ஏற்கனவே குறிப்பிட்ட காலப்பகுதிக்கான தனது நிதி அறிக்கைகளில் முழுமையாக உள்வாங்கியுள்ளது.


டிஜிட்டல் தளங்கள்
தற்போதைய மதிப்பீடுகளின் அடிப்படையில், மேலதிக நிதி இழப்பீடு எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் அந்த இழப்பினை மீட்கும் நடைமுறைகளை வங்கி ஏற்கனவே ஆரம்பித்துள்ளதுடன், குறித்த வாடிக்கையாளர்களிடமிருந்து அதனை மீளப்பெறும் நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.

வங்கியின் அன்றாடச் செயற்பாடுகள், டிஜிட்டல் தளங்கள் மற்றும் வாடிக்கையாளர் சேவைகள் எவ்விதமான தங்குதடையுமின்றி வழக்கம் போல் இடம்பெற்று வருகின்றன.

வங்கியின் வலுவான நிதியியல் இருப்பு மற்றும் சுமார் 3.8 ட்ரில்லியன் ரூபாய் சொத்துத் தளம் ஆகியவற்றின் பின்னணியில், வங்கியின் ஒட்டுமொத்த நிதியியல் உறுதிப்பாடு, இலாப மட்டம், அல்லது வாடிக்கையாளர்களின் நிதி மற்றும் வைப்புக்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு இவ்விடயத்தால் குறிப்பிடும்படியாக எவ்விதமான பாதிப்புக்களும் கிடையாது.

நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் பொறுப்புமிக்க வங்கிச்சேவை ஆகியவற்றில் நீண்டகால அர்ப்பணிப்பைக் கொண்டுள்ள ஒரு நிறுவனம் என்ற வகையில், செயற்பாட்டு ரீதியான நேர்மை, நிர்வாகம் மற்றும் வாடிக்கையாளர் சேவை ஆகியவற்றில் அதியுச்ச தராதரங்களைப் பேணுவதில் மக்கள் வங்கி தொடர்ந்து கவனம் செலுத்தி வருகின்றது” என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.