;
Athirady Tamil News

உத்தர பிரதேசத்தில் ஆற்றில் குளிக்கச் சென்ற 4 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

0

லக்னோ,

உத்தரப் பிரதேச மாநிலம் தப்னி கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள் இன்று அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் ஆழமான பகுதிக்குள் சென்றதாக கூறப்படுகிறது.

இதில், திடீரென சிலர் நீரில் மூழ்கத் தொடங்கியதை கண்டு அருகிலிருந்தவர்கள் அலறி உதவி கோரினர். சத்தம் கேட்டு விரைந்து வந்த கிராம மக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு நிஜாம் (21) மற்றும் மோனு ரய்தாஸ் (23) ஆகிய இருவரையும் பத்திரமாக மீட்டனர்.

ஆனால், ஹசீபுதீன் (20), ஷாஹித் (20), அன்ஷ் பிரஜாபதி (18) மற்றும் ஷான் (20) ஆகிய 4 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த துயரச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.