திருமணத்திற்கு முன் இந்த பரிசோதனை கட்டாயம் ; இலங்கையருக்கு வெளியான முக்கிய தகவல்
தலசீமியா மரபணுவைக் கொண்டவர்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சிறப்பு அட்டை வழங்கப்படும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனை கட்டாயம் மேற்கொள்ள வேண்டும் எனவும் அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.
கடுமையான நோய் நிலை
அரச வைத்தியசாலைகளில் இந்நோயாளர்களுக்கு இலவச சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும் தேவையான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே முழுமையான சிகிச்சை வாய்ப்பாக இருப்பினும், அது குறைந்தளவிலானவர்களுக்கே சாத்தியமாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
தலசீமியா மரபணு இரு பெற்றோரிடமிருந்தும் கிடைக்கும் போது குழந்தைகளில் கடுமையான நோய் நிலை ஏற்படும் அபாயம் உள்ளதாகவும், இது தொற்றுநோயல்ல என்றும் அவர்கள் விளக்குகின்றனர்.
இலங்கையில் சுமார் 2,500 தலசீமியா நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என்றும், ஆண்டுதோறும் 45 முதல் 60 வரையான குழந்தைகள் தலசீமியா பாதிப்புடன் பிறக்கின்றனர் என்றும் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் தெரிவித்துள்ளார்.