“போக்குவரத்து விதிகளை மீறினால் கடும் நடவடிக்கை” – முல்லைத்தீவு விபத்தையடுத்து விமலேஸ்வரன் எச்சரிக்கை!
;
இந்தச் சம்பவம் தொடர்பிலும், பயணிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும், வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை உடனடியாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டுசென்று குறித்த பேருந்துக்கு எதிராக முறைப்பாட்டைப் பதிவு செய்திருந்தது.
இந்த முறைப்பாட்டுக்கு அமைவாகத் துரித நடவடிக்கை மேற்கொண்டுள்ள தேசிய போக்குவரத்து ஆணைக்குழு, விபத்தை ஏற்படுத்திய தனியார் பேருந்தின் அனுமதிப் பத்திரத்தை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், போக்குவரத்துச் சட்டங்களை மீறுவோருக்கு எதிராகத் தொடர்ந்தும் இவ்வாறான கடுமையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.