;
Athirady Tamil News

டிரோன் தாக்குதல் எதிரொலி: குவைத் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்

0

குவைத் சிட்டி,

குவைத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நேற்று அதிகாலையில் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து, விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.

டிரோன் தாக்குதல்
நேற்று அதிகாலையில் விமான நிலையத்தின் இந்திய விமானங்கள் உட்பட சர்வதேச விமானங்கள் வந்து செல்கின்ற முக்கியமான முனையம்-1 மீது ஆளில்லா விமானம் (டிரோன்) மற்றும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் விமான நிலையத்தின் பல மின்னனு வசதிகள் கடுமையாக சேதமடைந்ததாகவும், பலர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

விமான சேவை
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மறு அறிவிப்பு வரும் வரை விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், சேவைகள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்படும் என்றும் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் கூறியதாக குவைத்தின் தினசரி பத்திரிகைகள் மற்றும் செய்தி ஊடகங்கள் சற்றுமுன் செய்தி வெளியிட்டுள்ளன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.