;
Athirady Tamil News

முச்சக்கரவண்டி மீது மரம் வீழ்ந்ததில் மூவர் பலி

0

நாவலப்பிட்டி, மாபாகந்த பகுதியில் முச்சக்கரவண்டி மீது மரமொன்று முறிந்து வீழ்ந்ததில், அதில் பயணித்த பாடசாலை மாணவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று (04) காலை 6:45 மணியளவில் குறித்த முச்சக்கரவண்டி மாபாகந்த பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்துக் கொண்டிருந்தபோதே இந்த விபத்து நேர்ந்துள்ளது.

பிரதான வீதிக்கு அருகில் இருந்த பெரிய மரம் முறிந்து வீழ்ந்ததில் முச்சக்கரவண்டியில் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், அதன் சாரதி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். மீலும் விபத்து சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.