;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் கொழும்பில் கடத்தல்

0

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளம் பெண் ஊடகவியலாளர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்த சர்மிளா நர்மிதன் எனும் 38 வயதான குறித்த இளம் பெண் சுதந்திர ஊடகவியலாளர் கொழும்பு, வத்தளைப் பகுதியில் வசித்து வந்த நிலையில் கடந்த 26 ஆம் திகதி அவரது வீட்டிற்கு சென்ற இனம் தெரியாத ஆயுதம் தாங்கிய நபர்கள் அவரை அங்கிருந்து வாகனம் ஒன்றில் கடத்திச் சென்றுள்ளனர்.

அரசாங்கித்திற்கு எதிராக விடுதலைப் புலிகளுடன் தொடர்புடைய பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டதாக கூறியே குறித்த நபர்கள் அவரை அழைத்து உரையாடிக் கொண்டிருந்ததன் பின் கடத்திச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.