;
Athirady Tamil News

பெற்ற மகனை கொன்று தந்தை செய்த பெரும் கொடூரம் ; வாட்ஸ்-அப் மூலம் சென்ற தகவலால் அதிர்ச்சி

0

கடலூர் மாவட்டம் நெய்வேலி வடக்குத்து அண்ணா கிராமம் சேர்ந்த தந்தை ஒருவரின் மனைவி தற்கொலை செய்து கொண்டதால் தனது மகனுடன் தனியாக வசித்து வந்தார்.

இதனால் மனவேதனையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நள்ளிரவில் தனது மகனை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் அவரது மகன் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.

தற்கொலை
பின்னர் சமையலறைக்கு சென்ற அங்கிருந்த கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்து கொள்வதற்கு முன் தனது சகோதரிக்கு வாட்ஸ்-அப் மூலம் தகவல் அனுப்பி உள்ளார். அதில் மகனுடன் தனியாக வசித்து வருவதால் எனக்கு வாழ பிடிக்கவில்லை. எனவே மகனை கொன்று தற்கொலை செய்து கொள்கிறேன் என கூறியிருந்ததாக தெரிகிறது.

இதனால் அதிர்ச்சியடைந்த அவரது சகோதரி வீட்டிற்கு வந்து பார்த்த போது ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

மேலும் உள்ளே சென்று பார்த்த போது தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது குறித்து நெய்வேலி டவுன் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெற்ற மகனை தந்தையே கழுத்தறுத்து கொலை செய்து விட்டு தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நெய்வேலி பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.