கொழும்பில் உணவகம் ஒன்றில் தீப்பரவல் ; நால்வர் காயம்
தலவத்துகொடை சந்திக்கு அருகிலுள்ள உணவகம் ஒன்றில் இன்று (09) செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தீயைக் கட்டுப்படுத்துவதற்காக கோட்டை மாநகர சபைக்குச் சொந்தமான 03 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
எரிவாயு கசிவு காரணமாகவே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து தலங்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.