;
Athirady Tamil News

மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் ; விடுக்கப்பட்ட எச்சரிக்கை

0

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால், மறுஅறிவித்தல் வரும் வரை குறித்த கடற்பரப்புகளில் பயணிப்பதைத் தவிர்க்குமாறு கடற்றொழிலாளர்களுக்கும் கடற்படைச் சமூகத்தினருக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மோசமான வானிலை நிலவக்கூடியதால், கடல் நடவடிக்கைகளில் ஈடுபடும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.