;
Athirady Tamil News

’மோடி சிறந்த தலைவர்.. புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்’ – டிரம்ப் புகழாரம்

0

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பேட்டி ஒன்றில் பிரதமர் மோடியை வெகுவாகப் புகழ்ந்து பேசியுள்ளார். அவர் பேசியது பின்வருமாறு;

போர்களில் இருந்து விலகி இருக்கிறார்
“இந்திய பிரதமர் மோடி மிகவும் சிறந்த தலைவர். அவர் போர்களில் இருந்து விலகி இருக்கிறார். எந்தவொரு போரிலும் சிக்காமல், நாட்டின் அமைதியைப் பேணுகிறார். அவருடைய இந்த அணுகுதல் மிகவும் புத்திசாலித்தனமானது.

நிலையான ஆட்சி
உண்மையில் இந்தியாதான் மிகப்பெரிய நாடு. அவர் 1.5 பில்லியன் மக்களின் பிரதிநிதி. இந்தியாவில் முன்பு அடிக்கடி பிரதமர்கள் மாறிக்கொண்டே இருந்த சூழலில், பிரதமர் மோடி பொறுப்பேற்று கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக நிலையான ஆட்சியை வழங்கி வருகிறார். அவர் அமைதியான தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், கொள்கைகளில் மிகக் கண்டிப்பான மற்றும் வலிமையான தலைவர்.”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய-அமெரிக்கா உறவு கடந்த ஓராண்டாகச் சீர்குலைந்து வரும் நிலையில், அதனை சரிசெய்யும் முயற்சியாக, ஜி-7 உச்சி மாநாட்டின்போது டிரம்ப்பும் மோடியும் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.