;
Athirady Tamil News

நைஜரில் வானூர்தி நிலையம் மீது தாக்குதல்; 35 பேர் உயிரிழப்பு

0

மேற்கு ஆப்பிரிக்கா நாடான நைஜரில் அந் நாட்டின் மிகப்பெரிய வானூர்தி நிலையம் மீது ஆயுதமேந்திய குழுவினர் நடத்திய தாக்குதலில் 35 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதீச தகவ்ல்கள் தெரிவிக்கின்றன.

வானூர்தி நிலையம் மீது நடத்தப்பட்ட இரண்டாவது தாக்குதல் இதுவென வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது
உயிரிழந்த 22 தாக்குதல்தாரிகளைத் தவிர, மேலும் நால்வர் காயமடைந்துள்ளதுடன், சந்தேகத்தின் பேரில் 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் குறித்து பொதுமக்கள் பிபிசி செய்திச் சேவைக்கு கருத்துத் தெரிவிக்கையில், தாங்கள் காலை நேர பிரார்த்தனைகளை முடித்த உடனேயே, தலைநகரான நியாமி இல் அமைந்துள்ள தியோரி ஹமானி சர்வதேச வானூர்தி நிலையப் பகுதியிலிருந்து வெடிப்புச் சத்தங்களும் துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களும் கேட்டதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் 22 தாக்குதல்தாரிகள், 11 இராணுவத்தினர் மற்றும் இரண்டு பொதுமக்கள் அடங்குவதாக நைஜர் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்போடு தொடர்புடைய ‘ஜமாத் நுஸ்ரத் அல்-இஸ்லாம் வல்-முஸ்லிமீன் என்ற குழு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

நைஜர் நாடு கடந்த ஒரு தசாப்த காலமாக இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களுக்கு எதிராகப் போராடி வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதமும் இதே வானூர்தி நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.