;
Athirady Tamil News

யாழில்.வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

0
வேலையற்ற பட்டதாரிகள் இன்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் முன்பாக போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் வேலைவாய்பு போட்டி பரீட்சையில் அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் அரசாங்கத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் வடமாகாணத்தில் பல வேலை வாய்ப்பு வெற்றிடங்கள் காணப்படும் நிலையில் அவற்றுக்கு பட்டதாரிகளை உள்ளீர்க்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரியும், அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களில் பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என கோரியுமே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

தமக்கான தீர்வுகள் கிடைக்க பெறாமல் விடின் எதிர்காலத்தில் தொடர் போராட்டங்களை முன்னெடுப்போம் எனவும் தெரிவித்தனர்

You might also like

Leave A Reply

Your email address will not be published.