;
Athirady Tamil News

வெனிசுலாவையும், ஈரானையும் பாருங்கள் முழுவதுமாக அழித்துவிட்டோம் – சுதந்திர தின விழாவில் டிரம்ப் பேச்சு

0

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 250-வது சுதந்திர நாள் கொண்டாட்டம் வாஷிங்டனில் உள்ள நேஷனல் மாலில் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்வின் போது வாஷிங்டனில் ஏற்பட்ட தீவிர புயல் அபாயம் காரணமாக டிரம்ப்பின் திட்டமிடப்பட்ட உரை மற்றும் அணிவகுப்புகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், நிகழ்வு அரங்கில் கூடியிருந்த மக்கள் வெளியேற்றப்பட்ட போதிலும் தனது உரையை ஆற்றுவேன் என்று தனது வளைதள பக்கத்தில் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

அதன்படி அவர் ஆற்றிய உரையில் பேசியதாவது:

உலகின் மிக வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக அமெரிக்கா உருவானது வரலாற்றில் தற்செயலான நிகழ்வு அல்ல. எனது முதல் பதவிக்காலத்தில் ராணுவத்தை நாங்கள் புதுப்பித்தோம். அதனை மூன்றாவது பதவிக்காலத்தில்தான் சிறிதளவு பயன்படுத்தினோம்.

அதைப்பற்றி முழுவதுமாகக் கூறி சர்ச்சையைக் கிளப்ப நான் விரும்பவில்லை. ஆனால் நாங்கள் அதைப் பயன்படுத்தினோம், மகத்தான வெற்றியையும் பெற்றோம். வெனிசுவேலா மற்றும் ஈரானையோ நீங்கள் பாருங்கள். நாங்கள் அதை முழுவதுமாக அழித்துவிட்டோம். அவர்களின் ராணுவத்தையே முற்றிலுமாக துடைத்தெறிந்துவிட்டோம் என்று டிரம்ப் உரையாற்றினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.