;
Athirady Tamil News

பேருந்துக்கு டீசலுக்குப் பதில் மண்ணெண்ணெய்; மூவருக்கு தண்டப்பணம்!

0

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் பயன்படுத்தி பேருந்தை இயக்கிய மூவருக்கு கல்முனை நீதிவான் நீதிமன்றம் திங்கட்கிழமை (06) தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

இதன்படி அம்பாறை கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சோதனை நடவடிக்கையில் சிக்கிய மூவருக்கும் தலா 120,000 ரூபா வீதம், மூன்று இலட்சத்து அறுபதாயிரம் ரூபாவை அபராதமாக செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கல்முனை போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி தலைமைப் பொலிஸ் பரிசோதகர் விஜேரத்ன தலைமையிலான பொலிஸ் குழுவினரால் முன்னெடுக்கப்பட்ட விசேட வாகன சோதனையின் போதே இந்த பேருந்து வண்டிகள் முற்றுகையிடப்பட்டது.

டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபட்டமை தொடர்பான குற்றச்சாட்டின் கீழ் சந்தேகநபர்களுக்கு எதிராக கல்முனை நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்ட நிலையில் இந்த தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் டீசலுக்குப் பதிலாக மண்ணெண்ணெய் ஊற்றி சட்டவிரோத முறையில் பொதுப் போக்குவரத்தில் ஈடுபடும் பேரூந்துகள் தொடர்பில் தமக்கு அறியத்தருமாறு கல்முனை தலைமையக போக்குவரத்து பொலிஸ் பிரிவின் பொறுப்பதிகாரி பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.