;
Athirady Tamil News

நாட்டில் கொட்டி தீர்க்கப்போகும் கனமழை…! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

0

ஊவா மாகாணத்தின் சில இடங்களிலும் அத்துடன் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுகின்றது.

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று (11-07-2026) விடுத்துள்ள அறிக்கையில் மேற்படி விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில் சப்ரகமுவ மாகாணத்திலும் அத்துடன் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

பனிமூட்டமான நிலை
அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மொனராகலை போன்ற மாவட்டங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும்.

இது ஒரு எச்சரிக்கை மட்டமாகக் கொள்ளப்படும், இது மனித உடலில் குறிப்பிடத்தக்களவு தாக்கத்தை ஏற்படுத்தும் வெப்பச் சுட்டெண் என அழைக்கப்படும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அத்துடன் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

வறட்சியான வானிலை
நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் வறட்சியான வானிலை காணப்படும்.

மத்திய மலைப் பிராந்தியத்தின் மேற்கு சரிவுகளிலும் வடமத்திய மாகாணத்திலும் அத்துடன் புத்தளம், மொனராகலை, ஹம்பாந்தோட்டை, திருகோணமலை மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் மணித்தியாலத்திற்கு சுமார் 40 – 50 km வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.