;
Athirady Tamil News

இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவு

0

ஜகார்த்தா,

ஆசியாவில் அமைந்துள்ள தீவு நாடு இந்தோனேசியா. இந்நாட்டில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தீவுகள் அமைந்துள்ளன. இந்நாட்டில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன.

நிலநடுக்கம்
இந்நிலையில், இந்தோனேசியாவில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் பபுவா மாகாணம் அபேபுரா நகரில் இருந்து தென்மேற்கே 96 கி.மீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் லேசாக அதிர்ந்தன.

ஆனாலும், இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு போன்ற பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. அதேபோல், நிலநடுக்கம் தொடர்பாக சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.