;
Athirady Tamil News

இரு இளைஞர்களின் உயிரை பறித்த சம்பவம் ; இரவில் நடந்த அசம்பாவிதம்

0

கொழும்பு – கண்டி பிரதான வீதியில் உள்ள பத்தாலியா சந்திப்பு அருகே, நேற்று இரவு 10 மணிக்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு இளைஞர்கள் விபத்தொன்றில் உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் ரடவடுன்ன பகுதியைச் சேர்ந்த 20 மற்றும் 21 வயதுடைய இரண்டு இளைஞர்கள் ஆவர்.

மேலதிக விசாரணை
கொழும்பிலிருந்து அனுராதபுரத்திற்குச் சென்று கொண்டிருந்த ஒரு தனியார் பேருந்தை மோட்டார் சைக்கிள் முந்திச் செல்ல முயன்ற போது பேருந்து மீது மோதியதாகவும், பின்னர் கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்ற லொறி மீது மோதி விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கபடுகின்றது.

விபத்தில் படுகாயமடைந்த இரண்டு இளைஞர்களும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட பின்னர் உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.