யாழில். பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான AI தொழில்நுட்பப் பயிற்சி
யாழ் சமூக செயற்பாட்டு மையம் (JSAC) ஏற்பாடு செய்த பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கான செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பப் பயிற்சி செயலமர்வு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ் சமூக செயற்பாட்டு மையத்தின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர், நிர்வாக முகாமையாளர், திட்ட முகாமையாளர் உள்ளிட்ட நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
முப்பதிற்கும் மேற்பட்ட பெண் அரசியற்செயற்பாட்டாளர்கள் இப்பயிற்சி செயலமர்வில் பங்கேற்றனர். இப்பயிற்சியானது Curveup நிறுவனத்தின் அனுபவமிக்க வளவாளர்களால் நடத்தப்பட்டது.
பெண் அரசியற்செயற்பாட்டாளர்களின் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தி, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தும் அறிவையும் நடைமுறைத் திறன்களையும் வழங்கும் நோக்கில் இப்பயிற்சி வடிவமைக்கப்பட்டுள்ளது.
இப்பயிற்சி செயலமர்வு தொடர்ச்சியாக மேலும் பல பெண் அரசியற்செயற்பாட்டாளர்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
