பேராசிரியர் ரகுராம் தொடர்ந்த வழக்கு – எதிர்மனுதரர்களுக்கு அழைப்பு கட்டளை அனுப்ப உத்தரவிட்ட மன்று
யாழ்ப்பாண பல்கலைக்கழக கழக முன்னாள் கலைப்பீடாதிபதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் தொடர்பில் சமூக ஊடகங்களில் அவதூறு பரப்பினார்கள் என தொடரப்பட்ட வழக்கில், எதிர்மனுதாரர்களின் அவதூறு கூற்றுகளை அகற்ற வேண்டும் என நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் , முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்ரமணியம் ரகுராம் குறித்த முன்னாள் மாணவியுடன் உரையாடிய தொலைபேசி ஒலிப்பதிவு என சில ஒலிப்பதிவுகள் டிக்டோக் தளம் மற்றும் முகநூல்களில் பகிரப்பட்டன.
அதன் அடிப்படையில் சிலரால் முகநூல்களிலும் யூடியூப் தளத்திலும் கருத்துக்கள் பகிரப்பட்டன.
இந்நிலையிலையே , பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் , நிகழ்நிலை காப்பு சட்டத்தின் பிரிவு 20இன் கீழ் யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீடாதிபதி சிவசுப்பிரமணியம் ரகுராமால் கடந்த முதலாம் திகதி , தன் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ள மாணவி , அவரது நண்பியான முன்னாள் மாணவி , யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் , ஆகியோருடன் இணைய இடையீட்டாளர்களாக யூடியூப் , டிக்டொக் , பேஸ்புக் ஆகியவை மனுதாரர் தொடர்பிலான தடை செய்யப்பட்ட கூற்றுக்களை பிரசுத்தமைக்கு எதிராக என 14 பேரை எதிர் மனு தரர்களாக குறிப்பிட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது