;
Athirady Tamil News

ஏ9 வீதியில் விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழப்பு!

0

மதவாச்சிய, வஹமாலு கொல்லேவ பகுதியில் உள்ள ஏ9 பிரதான வீதியில் இன்று (14) பிற்பகல் இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

விபத்தில் வஹமாலு கொல்லேவ பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

வழக்கு ஒன்றில் முன்னிலையாகிவிட்டு திரும்பிய போது அனர்த்தம்
ஹட்டன், கொட்டகல பகுதியிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த லொரி ஒன்றும், மதவாச்சியவிலிருந்து அனுராதபுரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும் வஹமாலு கொல்லேவ பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்த நபர் நீதிமன்ற வழக்கு ஒன்றில் முன்னிலையாகிவிட்டு, மதவாச்சியவிலிருந்து தனது மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, திடீரென மோட்டார் சைக்கிள் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, வீதியின் எதிர் திசைப் பாதைக்குச் சென்றதால், எதிரே வந்த லொரியுடன் பலமாக மோதியுள்ளது என்பது முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தைத் தொடர்ந்து லொரியின் ஓட்டுநரை மதவாச்சிய பொலிஸார் கைது செய்துள்ளதுடன் விசாரணைகாளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.