;
Athirady Tamil News

கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்: இந்தியர்களில் ஒருவர் பலி; 6 பேர் காயம்

0

ஷார்ஜா

ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சென்ற 2 கப்பல்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் இந்தியர் பலியாகி உள்ளார்.

ஈரான்-அமெரிக்க மோதலால் மேற்காசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள சூழலில், ஹார்மூஸ் ஜலசந்தி வழியே சென்ற 2 ஐக்கிய அரபு அமீரக கப்பல்கள் மீது ஈரானின் 2 ஏவுகணைகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் இந்தியர் பலியாகி உள்ளார்.

2 கப்பல்கள்
இதுபற்றி ஐக்கிய அரபு அமீரக அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில், மொம்பாசா மற்றும் அல் பாஹியா என்ற ஐக்கிய அரபு அமீரகத்தின் 2 சரக்கு கப்பல்கள் மீது ஏவுகணைகளை கொண்டு ஈரான் தாக்குதல் நடத்தியுள்ளது. ஹார்மூஸ் ஜலசந்தியின் தெற்கே ஓமன் கடல் பகுதி வழியே கடந்து சென்றபோது இந்த தாக்குதல் நடந்துள்ளது.

இதில், மொம்பாசா கப்பலில் இருந்த இந்தியர் ஒருவர் பலியானார். இதுதவிர, 6 இந்தியர்கள் உள்பட 8 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 2 பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள். 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டு உள்ளது என அறிக்கை தெரிவிக்கின்றது.

சர்வதேச சட்ட விதிமீறல்
இந்த தாக்குதலால் கப்பல்களுக்கும் பலத்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதற்கு ஐக்கிய அரபு அமீரக வெளிவிவகார அமைச்சகமும் கண்டனம் தெரிவித்து உள்ளது. சர்வதேச சட்ட விதிமீறலில் ஈடுபட்டு உள்ளது என்றும் இதற்கு தக்க பதிலடி கொடுக்க அமீரகத்திற்கு உரிமை உள்ளது என்றும் தெரிவித்து இருக்கிறது. இதனால், அந்த பகுதியில் பதற்றம் அதிகரித்து காணப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.