;
Athirady Tamil News

வருங்கால கணவனை கொலை செய்த பெண் வழக்கு: இந்தியப் பிரதமருக்கு ஒரு கடிதம்

0

இந்தியாவின் மஹாராஷ்ட்ரா மாநிலத்தில், பெண்ணொருவர் தன் வருங்கால கணவரை கோட்டை உச்சியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற வழக்கில், கொல்லப்பட்ட இளைஞரின் தாய் பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

வருங்கால கணவனை கொலை செய்த பெண்
மஹாராஷ்ட்ரா மாநிலத்திலுள்ள புனேயைச் சேர்ந்த கேத்தன் அகர்வால் என்பவருக்கும், சியா கோயல் (20) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், தனது பிறந்தநாளைக் காரணம் காட்டி கேத்தனை கோட்டை ஒன்றிற்கு அழைத்துச் சென்ற சியா, தன் காதலனான சேத்தன் சௌத்ரி (22) என்பவருடைய உதவியுடன் அவரை பள்ளத்தில் தள்ளிக் கொலை செய்தார்.

பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ள தாய்
கேத்தனின் தாயாகிய ராக்கி அகர்வால், இந்திய பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், எல்லா தாய்மார்களையும்போல, என் மகன் திருமணம் செய்துகொள்ளவேண்டும், அவன் குடும்பமாக வாழ்வதை பார்க்கவேண்டும் என்றுதான் நானும் விரும்பினேன்.

ஆனால், அவனுக்கு இறுதிச்சடங்கு செய்யும் நிலை எங்களுக்கு உருவாகிவிட்டது.

நாங்கள் உங்களிடம் சிறப்பு சலுகை எதையுமோ அல்லது எங்கள் மீது இரக்கம் காட்டவேண்டும் என்றோ கேட்கவில்லை. எங்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்றுதான் கேட்கிறேன்.

கேத்தனை திருப்பிக் கொண்டுவர முடியாது என்பது உண்மைதான். ஆனால், அவனது உயிரைப் பறித்தவர்களுக்கு சட்டப்படி கடும் தண்டனை வழங்கவேண்டும்.

மகனை இழந்த ஒரு தாயின் உங்களுக்குக் கேட்கும் என்று நினைக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கேத்தனின் தாய்.

அத்துடன், கேத்தன் இரந்த துயரம் தாங்காமல், அவரது தாத்தாவும் இறந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள அவர், சில நாட்களுக்குள், இரண்டு தலைமுறைகளைச் சேர்ந்த இரண்டு உயிர்களை பறிகொடுத்துவிட்டோம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், கேத்தனின் தந்தையான விஷால் அகர்வால், தன் மகனுடைய மரணத்துக்கு நீதி கேட்டு ஏற்கனவே ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.