தலைக்கவச தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ; கரும்புகையால் சூழ்ந்த சுற்றுவட்டாரம்
கொழும்பு ஹோமாகம – கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தொழிற்சாலை ஒன்றில் இன்று (21) காலை தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் அமைந்துள்ள தலைக்கவச உற்பத்தி தொழிற்சாலையொன்றிலேயே இவ்வாறு தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தீப்பரவலை கட்டுப்படுத்த, கோட்டே மற்றும் தெஹிவளை மாநகர சபைகளிலிருந்து ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தீயணைப்பு பிரிவு தெரிவித்துள்ளது.