;
Athirady Tamil News

உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டம்: ஆசியாவை விஞ்சிய ஆப்பிரிக்கா

0

ஐக்கிய நாடுகள் சபையின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து குறித்த வருடாந்திர அறிக்கையில், உலகளவில் பட்டினி குறையும் நிலையில் இருந்தாலும், அந்த முன்னேற்றம் சமமாக இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 ஜூலை 21 அன்று வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில், ஆப்பிரிக்கா கண்டம், ஆசியாவை விட அதிகமான மக்கள் பட்டினி மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம், முதன்முறையாக உலகில் அதிகளவில் பட்டினியை எதிர்கொள்ளும் கண்டமாக ஆப்பிரிக்கா மாறியுள்ளது.

ஆப்பிரிக்காவில் பல கோடி மக்கள் போதுமான உணவின்றி வாழ்ந்து வருவதாகவும், குறிப்பாக சஹாரா தெற்குப் பகுதிகள் மற்றும் ஜிம்பாப்வே போன்ற நாடுகளில் உணவு உதவிக்கு மக்கள் அதிகமாக சார்ந்துள்ளனர்.

ஐ.நா. அறிக்கையில், உலகளவில் பட்டினி குறைப்பதில் முன்னேற்றம் இருந்தாலும், அது சமமாக இல்லை. சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு மேம்பட்டாலும், ஆப்பிரிக்காவில் நிலைமை மோசமடைந்துள்ளது.

இதனால், ஆப்பிரிக்கா கண்டத்தில் உணவு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் சர்வதேச உதவி, அரசியல் நிலைத்தன்மை, வேளாண் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றம் அவசியம் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.