;
Athirady Tamil News

லிபர்ட்டி பிளாசாவில் 300க்கும் அதிகமான கைப்பேசிகள் பறிமுதல்

0

கொழும்பு – கொள்ளுப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள பிரபல ‘லிபர்ட்டி பிளாசா’ வணிக வளாகத்தில் உள்ள கடை ஒன்றில் வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்குள் இறக்குமதி செய்யப்பட்ட 300க்கும் மேற்பட்ட அதிநவீன கைப்பேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட இந்த கைப்பேசிகளில் ஐபோன்கள் (iPhones) உட்பட பல முன்னணி நாமங்களின் நவீன ரக கைப்பேசிகள் அடங்குவதுடன், அவற்றின் சந்தைப் பெறுமதி சுமார் 50 மில்லியன் ரூபா (5 கோடி ரூபா) என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சட்டவிரோத விற்பனை தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் சம்பவ இடத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.