;
Athirady Tamil News

ஜெர்மனி: வீட்டின் மீது சிறிய ரக விமானம் மோதி விபத்து – விமானி பலி

0

பெர்லின்,

ஜெர்மனியின் ஓல்டன்பர்க் நகரில் இருந்து நேற்று சிறிய ரக விமானம் புறப்பட்டது. விமானத்தில் 2 பேர் பயணம் செய்தனர்.

விமான விபத்து
விமானம் நடுவானில் கிராண்டர்கிசெ நகரின் லோயர் சக்சொனி பகுதியில் பறந்துகொண்டிருந்தது. அப்போது திடீரென அப்பகுதியில் உள்ள வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் விமானி உயிரிழந்தார். விமானத்தில் பயணித்த மற்றொருவரின் நிலை என்ன? என்று தெரியவில்லை. அவரை தேடும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இந்த விமான விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.