;
Athirady Tamil News

‘பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது…’ – ஐ.நா. சபையிலேயே நேரடியாக விமர்சித்த அர்ஜென்டினா அதிபர்

0

வாஷிங்டன்,

ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் அதிபர் ஜேவியர் மிலெய் இன்று ஐ.நா. சபையில் பேசினார். அப்போது ஐ.நா. சபையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், “மோதல்களையும், போர்களையும் தடுப்பதில் ஐ.நா. தோற்றுவிட்டது. குழப்பம், வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்வதற்கும், சர்வாதிகாரம் தழைப்பதற்கும் ஐ.நா. அனுமதித்துவிட்டது.

தற்போது ஐ.நா. ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது. நல்ல நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் போல் வேடமணிந்துள்ள, அதீத ஆணவம் கொண்ட ஒட்டுண்ணிகளின் வர்க்கத்தை தக்கவைப்பதே தற்போது ஐ.நா.வின் ஒரே நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்தார். மேலும், இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா. உறுப்பு நாடுகள் திட்டமிட்டு வாக்களித்ததாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.