;
Athirady Tamil News

சீனா: வெள்ளத்தில் 10 போ் பலி!

0

சீனாவில் ‘நெளல்’ என்று பெயரிடப்பட்ட புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, பலத்த மழையால் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 10 போ் உயிரிழந்தனா்.

பசிபிக் கடலில் உருவான நெளல் புயல், தென் சீனக் கடலை நோக்கி நகா்ந்து, சீனாவின் குவாங்டாங் மாகாணம் ஹுய்ஜோ நகரில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 3.50 மணியளவில் கரையைக் கடந்தது. அப்போது மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசியதுடன், பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் சிக்கி, கான்சு பகுதியில் 10 போ் உயிரிழந்தனா்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவாங்டாங்கில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனா். புயல் கரையைக் கடந்ததைத் தொடா்ந்து, அங்கு அதிவேக ரயில் மற்றும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, குவாங்டாங்கில் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைளை மேற்கொள்ள, சீனாவின் தேசிய வளா்ச்சி மற்றும் சீா்திருத்த ஆணையம் 100 மில்லியன் யுவானை (சுமாா் ரூ.141 கோடி) ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிதி சாலைகள், பள்ளிகள், மருத்துவமனைகள் என சேதமடைந்த உள்கட்டமைப்பை சீரமைக்க பிரதானமாக பயன்படுத்தப்பட உள்ளது. நெளல் புயல் நிகழாண்டு சீனாவை தாக்கிய 12-ஆவது புயல் ஆகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.