;
Athirady Tamil News

வடக்கு சுற்றுலாத்துறையில் முதலீடு செய்ய விரும்பும் நமீதா

0

யாழ்ப்பாணம் வருகை தந்திருந்த இந்திய திரைப்பட நடிகர்களான வீரேந்திர சவுத்திரி – நமீதா தம்பதியினர், யாழ்ப்பாணம் கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்திற்கு சென்று விசேட கலந்துரையிடலில் ஈடுபட்டனர்

இந்தக் கலந்துரையாடலில்,   வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் தலைவர் கலாநிதி ஜெ. விவேகானந்தன், வடக்கு மாகாண சுற்றுலாத்துறை பணியகத்தின் பணியாளர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

இந்த கலந்துரையாடலில் வடக்கு மாகாண சுற்றுலாத்துறையின்  தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும், வீரேந்திர சவுத்திரி- நமீதா குழுவினரால் வடக்கில் மேற்கொள்ளப்படவுள்ள முதலீடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன.

 

You might also like

Leave A Reply

Your email address will not be published.