ஒரு பவுன் தங்கம் வழங்கும் அண்ணன் சீர் திட்டம் – பட்ஜெட்டில் அமைச்சர் மரிய வில்சன் அறிவிப்பு! By Editor-A Last updated Aug 5, 2026 0 Share TN Budget 2026 : தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, விஜய் தலைமையிலான தவெக அரசு தனது முதல் முழுமையான பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. நிதியமைச்சர் மரிய வில்சன் பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் மாநிலக் கடன் இரு மடங்காக உயர்ந்துள்ளதாகவும், வட்டிச் செலவினம் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தாய்மாமன் தங்க மோதிரம்பட்ஜெட்டின் முக்கிய அறிவிப்புகளில், அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்திற்கு ரூ.560 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பெண்களின் திருமண நாளில் அரசின் சார்பில் 8 கிராம் தங்க நாணயமும் பட்டுப் புடவையும் வழங்கும் திட்டத்திற்கு ரூ.812 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. கல்வித் துறையில், பெருந்தலைவர் காமராசர் சிறப்புப் பள்ளிகள் மற்றும் நவீன உண்டு உறைவிடப் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளன. 9 முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கல்வி, உணவு, சீருடை, தங்குமிடம் மற்றும் பாடப்புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ.125 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்கு மொத்தம் ரூ.44,527 கோடி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், கல்லூரி மாணவர்களுக்கான ‘வெற்றி மடிக்கணினி திட்டத்திற்கு’ ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. Free Download WordPress ThemesDownload WordPress ThemesDownload Premium WordPress Themes FreePremium WordPress Themes Downloadudemy paid course free download 0 Share