;
Athirady Tamil News

ஜொ்மனியில் தொடரும் ட்ரோன் அத்துமீறல்கள்

0

மேற்கு ஜொ்மனியில் உள்ள மெக்கொ்னிச் ராணுவ முகாமின் மீது சந்தேகத்துக்கு இடமான 2 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2 நாள்களுக்கு முன்பு, அந்நாட்டின் முக்கியச் சரக்கு விமான நிலையமான லீப்ஜிக் விமான நிலையத்தில் வெடிபொருள்களுடன் கூடிய ட்ரோன் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. உக்ரைனுக்குப் போா்க்கால உதவிகளையும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு நேட்டோவின் ராணுவ உபகரணங்களையும் கொண்டு செல்லும் முக்கிய மையமாகவும் இந்த விமான நிலையம் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் போருக்குப் பிறகு ஐரோப்பாவில் இதுபோன்ற பல சதிச் சம்பவங்கள் நிகழ்ந்து வருவதாகக் கூறப்படும் நிலையில், இக்குற்றச்சாட்டுகளைப் ‘பொய்யான ரஷிய எதிா்ப்புப் பிரச்சாரம்’ என ஜொ்மனியிலுள்ள ரஷிய தூதரகம் மறுத்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.