;
Athirady Tamil News

மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை

0

நாட்டின் சில கடற்பரப்புகளில் பலத்த காற்றும், கடுமையான கடல் கொந்தளிப்பும் நிலவக்கூடும் என்பதால் வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை (Red Alert) விடுத்துள்ளது.

மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 60 கிலோமீட்டருக்கும் அதிகமாக காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என்பதால், மறுஅறிவித்தல் வரும் வரை மீனவர்கள் மற்றும் கடற்படைச் சமூகத்தினர் இப்பகுதிகளுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு, திருகோணமலை, கங்கேசன்துறை, மன்னார் ஊடாக சிலாபம் வரையான மற்றும் காலியிலிருந்து மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் இப்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் தற்காலிகமாகக் கொந்தளிப்பாக மாறக்கூடும். எனவே, வளிமண்டலவியல் திணைக்களம் அவ்வப்போது வெளியிடும் அடுத்தடுத்த முன்னறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறு பொதுமக்கள் மற்றும் மீனவர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.