;
Athirady Tamil News

சிறைச்சாலை வன்முறையை தூண்டிய குழுக்கள் அடையாளம்

0

குருவிட்ட, பள்ளன்சேன மற்றும் புதிய மகசின் சிறைச்சாலைகளில் அண்மையில் இடம்பெற்ற வன்முறைக் சம்பவங்களைத் தூண்டுவதற்குப் பொறுப்பான குழுக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், அடையாளம் காணப்பட்ட கைதிகளை வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றுவது உள்ளிட்ட அவசியமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வன்முறையின் போது கைதிகளால் சிறைச்சாலைக் கூரைகள் சேதப்படுத்தப்பட்டதை அடுத்து, குருவிட்ட சிறைச்சாலையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த பகுதியில் அடிக்கடி மழை பெய்து வருவதால் பாதிக்கப்பட்ட சிறைகளில் கைதிகளைத் தங்கவைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதற்கமைய, இரத்தினபுரிப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரேணுகா ஜெயசுந்தரவின் மேற்பார்வையின் கீழ் இன்று (08) சிறைச்சாலையில் விசாரணைகள் நடத்தப்பட்டதுடன் சிறைச்சாலையின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, வன்முறையின் போது இரண்டு கைதிகள் உயிரிழந்ததாகவும், அவர்களின் உடல்களில் குண்டு காயங்கள் காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், குறித்த சிறைச்சாலையில் பார்வையாளர் அனுமதி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.