;
Athirady Tamil News

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் நன்கொடை

0

புங்குடுதீவு வைத்தியசாலைக்கு புலம்பெயர் உறவுகளின் நன்கொடை

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச் சங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க புங்குடுதீவு உலக மையம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஏற்பாட்டில் 04-08-2026 அன்று இரண்டு இலட்சத்து முப்பத்தைந்தாயிரம் (235000 ) ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் இடம்பெற்றது.

சுவிட்சர்லாந்து ( சுவிஸ்) நாட்டில் வாழ்ந்து வருகின்ற புங்குடுதீவு மூன்றாம் வட்டாரத்தை சேர்ந்த திருமதி ரிச்சர்ட் நந்தினி அவர்களின் 50 வது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது குடும்பத்தினரின் நிதியுதவியில் வைத்தியசாலைக்கு தேவையான குறித்த உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன.

அத்துடன் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் உடனடியாக மேற்கோள்ளப்பட வேண்டிய செயற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடல் இடம்பெற்றது.

புங்குடுதீவு வைத்தியசாலையின் பிரதம மருத்துவர் செல்வி ச. தாரணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் திரு. கருணாகரன் நாவலன், புங்குடுதீவு உலக மையம் செயலாளரும் நோயாளர் நலன்புரி சங்கத்தின் உப தலைவருமான கருணாகரன் குணாளன், புங்குடுதீவு – சுவிஸ் விழிப்புணர்வு ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், கனடா புங்குடுதீவு பழைய மாணவர் சங்கத்தின் பிரதிநிதிகள் மற்றும் புங்குடுதீவு சைவ இளைஞர் சங்கத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.