;
Athirady Tamil News

நாடெங்கும் அதிகரிக்கும் வெப்பநிலை ; வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

0

நாட்டில் அதிகபட்சமாகப் பொலன்னறுவையில் 37.2 செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், வவுனியாவில் 35.7 செல்சியஸ், அநுராதபுரத்தில் 33.7 செல்சியஸ், யாழ்ப்பாணத்தில் 33 செல்சியஸ், கொழும்பில் 31.4 செல்சியஸ் மற்றும் காலி 29.6 செல்சியஸ் என்ற அளவில் வெப்பநிலைகள் பதிவாகியுள்ளன.

நுவரெலியாவில் நாட்டின் மிகக் குறைந்தபட்ச அதிகபட்ச வெப்பநிலையாக 19.7 செல்சியஸ் பதிவாகியுள்ளது.

பண்டாரவளையில் 28.8 செல்சியஸ் கட்டுக்கஸ்தோட்டையில் 29.0 செல்சியஸ் வெப்பநிலையும் பதிவாகின.

நாட்டின் வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளிலேயே அதிகளவிலான வெப்பநிலை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.