கொழும்பு துறைமுகத்தில் பெருந்தொகை போதைப்பொருள்; வெளிநாட்டில் இருந்து வந்த கொள்கலனால் அதிர்ச்சி!
கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் ஒன்றில் ‘ஐஸ்’ எனச் சந்தேகிக்கப்படும் பெருந்தொகையான போதைப்பொருள் தொகை ஒன்று கைப்பற்றப்பட்டது.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் ‘ஐஸ்’ (ICE) வகை போதைப்பொருளாக இருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுவதுடன், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் இந்தப் போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து இலங்கை கொண்டுவரப்பட்ட குறித்த கொள்கலனில் மறைத்து வைத்து இந்தப் போதைப்பொருள் கடத்தி வரப்பட்டுள்ளமை இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.