;
Athirady Tamil News

நேபாளத்தில் பேரழிவு ; நீர்மின் நிலைய சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க தீவிர தேடுதல்

0

நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளம் மற்றும் நிலச்சரிவைத் தொடர்ந்து திரிசூலி-3ஏ (Trishuli-3A) நீர்மின் நிலையத்தின் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த மீட்புப் பணிகளில் முப்படை வீரர்கள் காவல்துறையினர் மற்றும் பயிற்சி பெற்ற நாய்களுடன் கூடிய 90 பேர் கொண்ட சிறப்பு மீட்புக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த நிபுணர்கள் அடங்கிய மீட்புக் குழுவினர் இந்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்

சுரங்கத்தின் மேற்பகுதியில் (Crown) 2அல்லது3 அடி அளவில் துளையிடப்பட்டு கயிறுகள் மூலம் மீட்புப் படையினர் உள்ளே இறங்கிச் சோதனைகளை மேற்கொண்டனர்.

எனினும் உள்ளிருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. இந்தநிலையில், கடுமையான மற்றும் ஆபத்தான சூழலிலும் மீட்புக் குழுவினர் தொடர்ந்து 24 மணி நேரமும் அயராது உழைத்து வருவதாகப் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் பேரிடரில் ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ள நிலையில் நீர்மின் நிலையச் சுரங்கங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளத்தால் வீதிகள் அடித்துச் செல்லப்பட்டதாலும் பாலங்கள் சேதமடைந்ததாலும் ரசுவா மாவட்டம் இன்னும் வெளி உலகத்துடன் தொடர்பில்லாமல் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பகுதியில் உணவுப் பொருட்கள் இன்னும் ஓரிரு நாட்களுக்கு மட்டுமே போதுமான அளவில் இருப்பதாகவும் சமையல் எரிவாயு முற்றிலுமாக தீர்ந்துவிட்டதாகவும் சுகாதாரப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

மின்சார விநியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளதால் மக்கள் உறவினர்களுடன் தொடர்புகொள்ள முடியாமல் சிரமப்படுகின்றனர்.

வீதிகள் சாலைகள் சீரமைக்கப்பட்டு வரும் பகுதிகளில் நிவாரணப் பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் துண்டிக்கப்பட்டுள்ள சமூகங்களை விரைந்து சென்றடைய மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தேசிய பேரிடர் ஆபத்து குறைப்பு மற்றும் முகாமை ஆணையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இந்த பேரிடரில் சிக்கி இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 800 ஐ அண்மித்துள்ளது. அதேநேரம் 2500 பேரை இன்னும் காணவில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.