;
Athirady Tamil News

கொலம்பியா: கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் பலி

0

பொகொடா,

கொலம்பியாவில் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர்.

தென் அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு கொலம்பியா. இந்நாட்டில் பயங்கரவாத குழுக்கள், கிளர்ச்சியாளர்கள், ஆயுதக்குழுக்கள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள் உள்பட பல்வேறு சட்டவிரோத கும்பல்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த கும்பல்கள் அவ்வப்போது பாதுகாப்புப்படையினர், பொதுமக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

ராணுவ முகாம் மீது தாக்குதல்

இந்நிலையில், கொலம்பியாவின் நோர்டே டி சாண்டாண்டர் மாகாணம் ஒகானா நகரில் ராணுவ முகாம் செயல்பட்டு வருகிறது. வெனிசுலா எல்லையில் அமைந்துள்ள இந்த ராணுவ முகாம் மீது இன்று தேசிய விடுதலை ராணுவம் என்ற கிளர்ச்சிக்குழுவினர் தாக்குதல் நடத்தினர்.

3 ராணுவ வீரர்கள் பலி

டிரோன் மூலம் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும், 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.

கொலம்பியாவில் கடந்த சில நாட்களுக்குமுன் புதிய ஜனாதிபதியாக அல்பர்டோ டி லா எஸ்பிரிலா பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.