;
Athirady Tamil News

புலமைப்பரிசிலில் மாகாண மட்டத்தில் முதலிடம் பிடித்த அல்-மனார் மாணவிக்கு கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் கௌரவம்

0
2026 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் 181 புள்ளிகளைப் பெற்று, கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழிமூலத்தில் முதலாமிடத்தையும், கல்முனைக் கல்வி வலயத்தில் முதன்மை இடத்தையும் பெற்றுச் சாதனை படைத்த மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரி மாணவி செல்வி முஹாஜிர் லிபா பாத்திமாவுக்குக் கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் விசேட பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் நேற்று (07) நடைபெற்ற இந்நிகழ்வில்இ கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹ்துல் நஜீம் மற்றும் பிரதிக் கல்விப் பணிப்பாளர்களினால் குறித்த மாணவிக்கு விருதுகளும் பரிசுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மருதமுனை அல்-மனார் மத்திய கல்லூரியின் முதல்வர் ஐ. உபைதுல்லா மற்றும் மாணவியின் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மாணவியின் சாதனையைப் பாராட்டி வாழ்த்தினர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.