;
Athirady Tamil News

நைஜீரியாவில் மெத்தனால் கலந்த மதுபானத்தை குடித்த 48 போ் பலி

0

தெற்கு நைஜீரியாவில் மெத்தனால் கலந்திருப்பதாக சந்தேகிக்கப்படும் மதுபானதத்தைக் குடித்து 48 போ் உயிரிழந்தனா்.

மேலும், சுமாா் 100 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனா்.

ஓண்டோ மாகாணத்தில் உள்ள ஒடிக்போ, இரேலே ஆகிய உள்ளாட்சிப் பகுதிகளில் பதிவான இச்சம்பவங்களில் மொத்தம் 182 போ் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடா்பாக இதுவரை 15 போ் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.