;
Athirady Tamil News

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாக காதலனை கொலை செய்த பெண்!

0

பெண் ஒருவர் காதலனை கொலை செய்த்தாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் லண்டனின் ஓல்ட் பெய்லி (Old Bailey) நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது.

மற்றொரு பெண்ணைச் சந்தித்ததாகத் தெரிவித்த தனது காதலனைக் கத்தியால் குத்திக் கொன்றதாகவும், பின்னர் அவர்கள் ஒன்றாக வசித்து வந்த குடியிருப்பிலேயே அவரது உடலை ஒன்பது நாட்களுக்கு மறைத்து வைத்திருந்ததாகவும் பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக  மின்னஞ்சல்

உயிரிழந்தவர் ஹென்ரிக் ஸ்லோத்சா (Henrik Slothsa) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். இவர் சிட்டிபேங்கில் (Citibank) பணியாற்றிய 52 வயதுடைய டேனிஷ் வங்கி அதிகாரி ஆவார். காதலனை கொலை செய்ததாகக் கூறப்படும் காதலி 50 வயதுடைய போலந்து நாட்டவருமான ஜோனா சியர்ப்கா (Joanna Sierpka) ஆவார்.

மார்ச் 15 அன்று, குற்றம் சாட்டப்பட்ட பெண் தற்கொலை செய்துகொள்ளப்போவதாகக் குறிப்பால் உணர்த்தும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, தெற்கு லண்டனில் உள்ள அந்த குடியிருப்பின் கதவை உடைத்துக்கொண்டு போலீசார் உள்ளே நுழைந்தனர்.

போலீசார் உள்ளே சென்றபோது, ​​அவர் எட்டு அங்குல சமையலறை கத்தியால் தனது கழுத்தை அறுக்க முயன்று கொண்டிருந்தார்.

அதேவேளையில், வீட்டின் படுக்கையறையில் திரு. ஸ்லோத்சாவின் சிதைந்த நிலையில் இருந்த உடலையும் அவர்கள் கண்டெடுத்தனர். அப்போது, ​​உடலுக்கு அருகில் காய்ந்த ரத்தப் படலம் ஒன்றும் காணப்பட்டது.

தனது காதலனைக் கொலை செய்ததில் எந்தவிதமான சர்ச்சையும் இல்லை என்று அரசுத் தரப்பு வழக்கறிஞர் டேனி ராபின்சன் நீதிமன்றத்தில் தெரிவித்தார். தனது மனநிலை காரணமாகவே இச்செயலைச் செய்ததாகக் கூறி ‘கொலைக்குற்றமற்ற மரணத்தை’ (manslaughter) ஒப்புக்கொண்டாலும், அரசுத் தரப்பு அவர் மீது திட்டமிட்ட கொலைக் குற்றச்சாட்டைப் பதிவு செய்துள்ளது.

மேலும், கடந்த சில மாதங்களாகவே அவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டு வந்ததும் நீதிமன்றத்தில் தெரியவந்தது. நவம்பர் 2025-ல் நடைபெற்ற ஒரு நிறுவன நிகழ்வில் சந்தித்த மற்றொரு ஊழியருடன் ஸ்லோத்சா நெருக்கமாகியிருந்தார்  சியர்ப்காவின் பிறந்தநாளன்று, தனது பணியிடத்தில் வேறொரு பெண்ணைச் சந்தித்திருப்பதாக அவரிடம் அவர் கூறியிருந்தார்.

பிரிட்டிஷ் அமெரிக்கன் டொபாக்கோ (British American Tobacco) நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பிரிவில் முன்பு பணியாற்றிய சியர்ப்காவின் நண்பர்கள், வேலையை இழந்த பிறகு அவர் கடுமையான மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தெரிவித்தனர்.

ஸ்லோத்சாவைக் கொன்ற பிறகு, அவரது மொபைல் போன் மூலம் அவரது மேலாளருக்கு வாட்ஸ்அப் (WhatsApp) செய்திகளை அனுப்பிய அவர், ஸ்லோத்சாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருப்பதாகப் பொய்யான தகவலைத் தெரிவித்திருந்தார்.

வீட்டிற்குள் காலி மது பாட்டில்களையும் போலீசார் கண்டெடுத்தனர்; இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது

You might also like

Leave A Reply

Your email address will not be published.