;
Athirady Tamil News

யாழ்ப்பாணத்தில் நூதன போராட்டத்தில் குதித்த பட்டதாரிகள்

0

வேலையற்ற பட்டதாரிகள் தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்து, தேங்காய் உடைத்து நூதன முறையில் போராட்டம் செய்தனர்.

யாழ். தபால் நிலையத்திற்கு முன்பாக இன்று (18) மதியம் 2 மணியளவில் ஒன்று கூடிய வேலையற்ற பட்டதாரிகள் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு பதிவு தபால் மூலம் உங்களுக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளனர்.

வேலைவாய்ப்பு
1 லட்சம் பேருக்கான வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்திற்கு, பட்டதாரிகள் 5 ஆயிரம் பேர் மட்டுமே உள்வாங்கப்படவுள்ளதாக அரசாங்கம் தீர்மானித்துள்ளதை கண்டித்து இந்த நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தபால் நிலையத்தில் இருந்து மகஜர் அனுப்பிய போது, தபால் பெட்டிக்கு மலர் மாலை அணிவித்தும் மலர் தூவி, கற்பூரம் காட்டி, தேங்காய் உடைக்கும் போது, 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும், தமக்கான வேலைவாய்ப்பை உறுதிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதுடன், தமது வேலை வாய்ப்பு தொடர்பில் கடவுளும், எமது தாய் தந்தையர்களுமான பொது மக்கள் ஆதரவை வழங்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.