;
Athirady Tamil News

‘இந்தியர்கள் உள்பட 47 நாடுகளைச் சேர்ந்தவர்களை போருக்காக ரஷியா பயன்படுத்துகிறது’ – ஜெலன்ஸ்கி

0

வாஷிங்டன்,

ஐ.நா. சபையின் 81-வது கூட்டத்தொடர் உயர்மட்ட பொது விவாதம் கடந்த 22-ந்தேதி தொடங்கியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் இந்த கூட்டத்தொடர் வரும் 28-ந்தேதி நிறைவடைய உள்ளது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள், முக்கிய பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஐ.நா. கூட்டத்தொடரில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-

“இங்கு ​​நான் ஐரோப்பிய நாடுகளிடம் பேசப்போவதில்லை. மாறாக, உக்ரைனுக்கு எதிரான கொடூரமான போரில் ரஷியா பல்வேறு நாட்டு மக்களை இறக்கிவிட்டுள்ளது. அந்த நாடுகளிடம் நான் பேச விரும்புகிறேன்.

உக்ரைன் ராணுவத்தால் பிடிக்கப்படும் போர்க்கைதிகள் வடகொரியா மட்டுமின்றி, மேலும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷியா சுமார் 47 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களை பயன்படுத்துகிறது. இதில் இந்தியா, நேபாளம், கானா, தஜிகிஸ்தான், ஏமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், ​​சூடான், தென்னாப்பிரிக்கா மற்றும் பல நாடுகளும் அடங்கும்.

அவ்வப்போது, ​​குறிப்பிட்ட போர்க்கைதிகளைத் தாயகத்திற்குத் திருப்பி அனுப்புமாறு சம்பந்தப்பட்ட நாடுகளிடம் இருந்து கோரிக்கைகளும் எங்களுக்கு வருகின்றன. இந்தப் போரில் ஈடுபடும் பிற நாடுகளைச் சேர்ந்தவர்கள் போர்க்களத்தில் உயிரிழந்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் ஏமாற்று வேலைகள் மற்றும் தந்திரங்கள் மூலம் போர்க்களத்தில் இறக்கிவிடப்பட்டுள்ளனர்.

உங்கள் நாட்டு மக்களை ரஷியாவிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்கள் மற்றொரு நாட்டின் போர்க்களத்திற்கு சென்று சேர அனுமதிக்காதீர்கள். ரஷிய அதிபர் புதின் இந்த போரில் உங்களையும் இழுத்துவிடுவதற்கு நீங்கள் அனுமதிக்காதீர்கள். புதின் போர் நடவடிக்கைகளுக்கான ஆதாரங்களை குறையுங்கள். அவரது போரை முடக்குங்கள்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.