பாடசாலை மாணவர்களுடன் வந்த வேனில் மோதிய இளைஞனுக்கு அரங்கேறிய துயரம்
நாரம்மல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கணங்கமுவ – கொந்துருவாவபொல உப பாதையில் கொந்துருவாவபொல பிரதேசத்தில் வைத்து, கணங்கமுவ நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றும், எதிர்திசையில் பாடசாலை மாணவர்களுடன் வந்த வேன் வாகனமும் மோதி இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து எதிர்திசையில் வந்த பாடசாலை வேன் வாகனத்துடன் மோதியதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தின் போது பலத்த காயங்களுக்குள்ளான மோட்டார் சைக்கிளின் பின்னால் பயணித்தவரும், பாடசாலை வேன் வாகனத்தின் ஓட்டுநரும் உடனடியாக குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மெதவ, நக்கவத்தை பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய, மோட்டார் சைக்கிள் ஓட்டுநரே உயிரிழந்துள்ளார்.
மேலும், இந்த சம்பவம் குறித்து நாரம்மல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.