;
Athirady Tamil News

காங்கோவிற்கு சென்ற படகு கவிழ்ந்ததில் 41 பேர் உயிரிழப்பு

0

டங்கனிகா ஏரியில் டான்சானியாவில் இருந்து காங்கோ சென்ற படகு கவிழ்ந்ததில், குறைந்தது 41 பேர் உயிரிழந்ததாக உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அப்படகில் சுமார் 100 பயணிகளும் சரக்குகளும் இருந்ததாக டங்கனிகா மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சர் நோரிஸ் முலோங்கோயி கூறினார்.

மேலும் 49 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பயணிகளை தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

“டான்சானியாவின் கிகோமா நகரில் இருந்து காங்கோவின் டங்கனிகா மாகாணத்தில் உள்ள கலெமி நகருக்கு சென்றுகொண்டிருந்த அந்த படகு, மபேரா கிராமத்திற்கு அருகே கவிழ்ந்தது,” என்று முலோங்கோயி ‘அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

டங்கனிகா ஏரி உலகின் மிகப்பெரிய நன்னீர் ஏரியாகவும், பைக்கால் ஏரிக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது ஆழமான ஏரியாகவும் விளங்குகிறது.

வியாழக்கிழமை நடந்த இந்தத் துயரச் சம்பவத்திற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் காங்கோவில் நடந்த படகு விபத்துகளில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.